நகை கடையில் சந்தேகமே வராத வகையில் திருடிய கேடி லேடி.. CCTV-யே மிரண்ட காட்சி

Update: 2025-07-04 03:33 GMT

தஞ்சாவூர் அருகே நகை கடையில் நூதன முறையில் நகையை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

பாபநாசம் அருகே உள்ள நகைகடையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 2 கிராம் மதிப்புள்ள தங்க காசு வாங்க வேண்டும் என கூறியுள்ளார். அதனால் கடை ஊழியர்கள் தங்க காசுகளை, ஒரே டிரேயில் வைத்து காண்பித்து கொண்டிருக்கும் போது, அந்த பெண் போலி தங்கசாசை வைத்துவிட்டு, ஒரிஜினல் காசை திருடிச்சென்றுள்ளார்.

இது குறித்து நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு போலீசார், அந்த பெண்ணை தேடி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்