ஜெயங்கொண்டம் அருகே உள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சியில் ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். அதன்படி காலை சூரிய உதயத்தின் போது ஒளிக்கதிர் லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் பிரகாசித்தது. இதனை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.