கரை ஒதுங்கிய கண்டெய்னர்.. சிதறிய முந்திரி கொட்டைகளை எடுத்து சென்ற மக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் அருகே கரை ஒதுங்கிய கண்டெய்னரில் இருந்து சிதறிய முந்திரிக் கொட்டைகளை மக்கள் ஆர்வத்துடன் எடுத்துச் சென்றனர். கேரள மாநிலம் கொச்சி அருகே அரபிக்கடலில் சரக்குக் கப்பல் கண்டெய்னர்களுடன் மூழ்கியது. கடலில் மூழ்கிய கண்டெய்னர்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இந்நிலையில் சின்னவிளை பகுதியில் கரை ஒதுங்கிய கண்டெய்னரில் இருந்து வெளியேறிய முந்திரிக் கொட்டைகளை மக்கள் எடுத்துச் சென்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.