ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திசை மாறி வந்த ஆடுகளை பத்திரமாக பாதுகாத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த ஜூஸ் கடை உரிமையாளருக்கு பாரட்டுகள் குவிந்து வருகிறது. உப்பூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் 30 ஆடுகள் அடைகலமடைந்த நிலையில், அதை பத்திரமாக பாதுக்காத்து, காவல் நிலையதிற்கு தகவல் கொடுத்திருக்கிறார். போலீஸார் விசாரணை நடத்தியதில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான ஆடுகள் என்பதும், நாய் துரத்தியதால் காணமால் போன ஆடுகளை இரண்டு நாட்களாக பாக்கியராஜ் தேடிவருவதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாக்கியராஜ்க்கு சொந்தமான அடுகளை அவரிடமே போலீஸார் ஒப்படைத்தனர்.