சென்னையில் இன்று நள்ளிரவு முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுகிறது. தனியார் பால் மற்றும் காபி தூள் விலை உயர்வு காரணமாக டீ மற்றும் காபி விலை உயர்வு என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சென்னையின் பல்வேறு பகுதிகளில் டீ மற்றும் காபி விலை உயர்த்தப்பட்டு, அதற்கான விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி, 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட Tea, 15 ரூபாய்க்கும்,15 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபி, 18 ரூபாயில் இருந்து 20 ரூபாய்க்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.