மின்கம்பம் சரிந்து விழுந்து ஒருவர் பலி
தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் கம்பம் சரிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக தஞ்சை சென்ற நிலையில், பெரியகோயில் அருகே உள்ள அவர்களின் இளநீர் கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாநகராட்சி ஒப்பந்த ஊழியர், செயல்டாமல் இருந்த மின்கம்பத்தின் மீது ஏறி மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக மின்கம்பம் சரிந்து அடியில் நின்றிருந்த சுப்பிரமணியன் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.