சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சமையல் எண்ணெய் வாங்குவது போல நடித்து, நூதன முறையில் எண்ணெயையும், பணத்தையும் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.ஒலக்கச் சின்னானூர் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சூப்பர் மார்கெட்டிற்கு மர்மநபர் ஒருவர் வருகை தந்தார். பின்னர் அங்கிருந்த கடை உரிமையாளரிடம் எண்ணெய் வாங்குவது போல நடித்து விலை அதிகமாக உள்ளதென வாக்குவாதம் செய்தார். இதனை தொடர்ந்து, உரிமையாளர் அசந்த நேரத்தில் பணத்தையும், கொடுக்காமல் எண்ணெயையும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.