"தாய்லாந்து சென்ற தமிழருக்கு நேர்ந்த கொடுமை" - வெளியான பகீர் ஆடியோ...கதறும் தாய்

Update: 2025-09-04 16:03 GMT

"தாய்லாந்து சென்ற தமிழருக்கு நேர்ந்த கொடுமை" - வெளியான பகீர் ஆடியோ... கதறும் தாய்

தாய்லாந்தில் வேலைக்கு சென்ற இளைஞர் கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அருகே கோவிலஞ்சேரி பகுதியில் வசித்து வரும் அமலா செல்வி என்பவரது மகன் சந்தோஷ், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக தாய்லாந்து ​அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், பாஸ்போர்ட்டை பறித்துக்கொண்டு தினமும் சித்ரவதை செய்வதாகவும், அங்கு தான் உட்பட 30க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதுபோன்று சிக்கித் தவிப்பதாகவும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாஃபியா கும்பலோடு சேர்ந்து துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபடுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்