சிறுநீரக கொள்ளை - விசாரணை மேற்கொள்ள அன்புமணி வலியுறுத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரககொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிப்பாளையம், குமாரப் பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்ற வரும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை சில கும்பல்கள் பறித்துச் செல்வதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். ஒரு லட்சம் ரூபாய்க்காக சிறுநீரகத்தை விற்கும் அளவிற்கு மக்களின் நிலை மோசமாக இருப்பதை புரிந்து கொள்ள முடிவதாக குறிப்பிட்டுள்ள அவர், இதையெல்லாம் கூட அறியாமல் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கதையளந்து கொண்டிருப்பதாக கூறினார்.