பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா - மஞ்சள் நீராட்டு விழா கோலாகலம்

Update: 2025-04-11 04:22 GMT

பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவை தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மீது மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்ந்தனர். மலைவாழ் மக்களின் பீனாச்சி வாத்திய இசை முழங்க அம்மன் சப்பரம் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தது. அவ்வழியே வந்த பக்தர்கள் மீதும், பேருந்தில் பயணித்த பயணிகள் மீதும் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்ந்தனர்.   

Tags:    

மேலும் செய்திகள்