கொடியேற்றத்துடன் மணக்குள விநாயகர் பிரம்மோற்சவ விழா
புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தின் 65 ஆவது பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது. புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகிறது. அந்த வகையில் இன்று 65வது ஆண்டு பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவையொட்டி நாள் தோறும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடப்பதோடு, கடல் தீர்த்தவாரி, திருக்கல்யணம், திருமுறை உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ முக்கிய நிகழ்வுகளாக செப் 8ம் தேதி தெப்ப உற்சவம்,14ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம், 20ம் தேதி108 சங்காபிஷேகம் நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.