#JUSTIN || "நேற்றோடு முடிந்த பதவிக்காலம் கடைசியில் செய்த காரியம்" தொடரும் Periyar University சர்ச்சை
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பை தமிழ் துறை தலைவரிடம் ஒப்படைத்ததால் மீண்டும் சர்ச்சை...
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதன் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தும் தொடரும் சர்ச்சை...
பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பொறுப்பு வகித்த ஜெகநாதனின் பதவிக்காலம் நேற்றுடன் பணி முடிந்த நிலையில், பொறுப்பினை பேராசிரியர் தமிழ்த்துறை தலைவர் பெரியசாமியிடம் ஒப்படைத்தார்.
பெரியசாமி ஆர்எஸ்எஸ் இயக்கத்தினைச் சார்ந்த ஆசிரியர் அமைப்பின் மாநில துணைத் தலைவர், இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, போலி சான்றிதழ் பணியில் சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத் தக்கது.
அசாதாரண சூழ்நிலை நிலவினாலோ துணை வேந்தர் உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தால் மட்டுமே பொறுப்பினை நியமிக்க முடியும். ஆனால் இவை ஏதுமில்லாத பொழுது ஆட்சிக்குழுவை கூட்டித் தான் துணை வேந்தர் பொறுப்பினை நியமிக்க முடியும்.
இந்த நிலையில் தமிழ் துறை தலைவருக்கு ஜெகநாதன் இந்த பொறுப்பை ஒப்படைத்தது பல்கலைக் கழக சாசனவிதி மற்றும் இயற்கை நீதிக்கு முரணானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.