சந்திரயான் 4 திட்டமானது, நிலவில் இருந்து அதன் மாதிரிகளை பூமிக்கு எடுத்துவரும் வகையான திட்டமாக இருக்கும் என சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனர் வீர முத்துவேல் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிசார் செயற்கைக்கோள் குறித்து விளக்கினார்.