இணைய வசதிக்காக தோண்டிய பள்ளம் - தவறி விழுந்த நபர் மீட்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இணைய வசதிக்காக வயர்கள் கொண்டு செல்வதற்காக சாலையோரமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆற்காடு கலவை சாலையின் ஓரமாக, தோண்டப்பட்டு எச்சரிக்கைக்காக எதுவும் வைக்கப்படாமல் இருந்த ஒரு குழிக்குள், நடந்து வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தவறி விழுந்தார். பின்பு அக்கம்பக்கத்தினர் அவரை நீண்ட நேரம் போராடி காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில், குழியை மூடாமல் அலட்சியமாக விட்டு சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.