பல்லக்கில் வந்த பெருமாள்... நெல்அளவை கண்டருளும் வைபவம் கோலாகலம்

Update: 2025-04-25 03:33 GMT

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 7-ம் நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்அளவை கண்டருளினார். இந்த வைபவத்தை நேரில் கண்டால், விவசாயம் செழிக்கும், உணவு பொருட்கள் பஞ்சம்இருக்காது, தங்களது இல்லங்களில் உணவு தட்டுப்பாடு நீங்கும் என்பது ஐதீகம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுதரிசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்