கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த பெண் - மருத்துவமனையில் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக வந்த பெண், பாம்பையும் கொன்று எடுத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஊத்தங்கரை அடுத்த படதாசம் பட்டி கிராமத்தை சேர்ந்த 41 வயதான தேவி என்பவரை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த உறவினர்கள், கடித்த பாம்பையும் கொன்று பையில் போட்டு கொண்டு வந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.