திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வளர்ப்பு நாயுடன் பக்தர் ஒருவர் தரிசனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயில் வளாகத்தில் கடந்த 9-ஆம் தேதி, ஒரு தம்பதி, அசைவ பிரியாணி சாப்பிட்டது சர்ச்சையான நிலையில், ஆந்திர பக்தர் ஒருவர், காவல்துறை மற்றும் கோவில் ஊழியர்களின் கண்காணிப்பை மீறி, தனது வளர்ப்பு நாயுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள், பக்தர்களிடம் ஆயிரக் கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை உள்ளே அழைத்துச் செல்லும் நிகழ்வுகளால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே, இவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அண்ணாமலையார் கோயிலில் வளர்ப்பு நாயுடன் சாமி தரிசனம் செய்த பக்தர்