"தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், வீரியம் இல்லாதது என்பதால், பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில், 100 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் கவுரவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று, வீரியம் இல்லாதது என்பதால், எந்த பதற்றமும், பயமும் தேவையில்லை என்று தெரிவித்தார்.