ஒரு குடும்பத்தையே நடுரோட்டில் இறக்கி விட்ட நடத்துனர் - அதிர்ச்சி காரணம்

Update: 2025-09-15 07:10 GMT

அரசுப் பேருந்தில் கடலையை சாப்பிட்டபின், கழிவுகளை அகற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட குடும்பத்தினரை நடத்துனர் நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன், அரசு பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவர்கள் கடலையை சாப்பிட்டு அதன் கழிவுகளை பேருந்திலேயே போட்டுள்ளனர். அவற்றை அப்புறப்படுத்துமாறு நடத்துனர் கூறியதை ஏற்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து,

பேருந்தை நிறுத்தி நடுவழியிலே​யே அந்த குடும்பத்தினரை நடத்துனர் இறக்கிவிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்