ஆடி மாதம் முதல் நாள் தேரோட்ட திருவிழா.. வேலூரில் கோலாகல கொண்டாட்டம்
ஆடி மாதம் முதல் நாளை முன்னிட்டு ஸ்ரீ காளியம்மன் ஆலயம் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. குடியாத்தம் பிச்சனூர் தேரடி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயம் தேர் திருவிழா ஆண்டுதோறும் ஆடி ஒன்றாம் தேதி நடைபெறும். அதன்படி அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் உற்சவத்திற்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரதிஷ்டை செய்து திருத்தேர் திருவிழா ஊர்வலம் நடைபெற்றது. பிச்சனூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் வழியாக திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.