தந்தி டிவி செய்தியால் நடந்த மாற்றம் - சரியான மின் கட்டண பில்லை வழங்கிய TNEB

Update: 2025-06-15 03:16 GMT

தந்தி டிவி செய்தியால் நடந்த மாற்றம் - சரியான மின் கட்டண பில்லை வழங்கிய TNEB

தந்தி டிவி எதிரொலியாக புதுக்கோட்டையில் அதிகமாக கொடுக்கப்பட்ட மின் கட்டணத்தை மின்வாரிய ஊழியர்கள்

திருத்தி வழங்கியுள்ளனர். புதுக்கோட்டை திருவப்பூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவருக்கு தவறுதலாக 63 ஆயிரத்து 500 ரூபாய் மின் கட்டணம் என பில் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக கட்டி வரும் நிலையில், அதிர்ச்சியடைந்த அவர் தந்தி டிவியிடம் மனக்குமுரலை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில்,

மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று பிழையை திருத்தி, சரியான 6 ஆயிரம் ரூபாய்க்கான கட்டண பில்லை கொடுத்து தவறுக்கு மன்னிப்பும் கேட்டு கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்