MountKilimanjaro | சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு..! கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி மலைக்க வைத்த சிறுவன்
விருதுநகர் மாவட்டம் பி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன், ஆப்பிரிக்கவில் உள்ள கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி வியக்க வைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி தலைமையில், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறியுள்ளனர். இவர்களில் பி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு என்ற ஐந்து வயது சிறுவரும் ஒருவர்... வெறும் ஐந்து வயதில் கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறிய சிறுவனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.