போதையில் இளைஞர்கள் செய்த அட்டூழியம்... பெட்ரோல் போட வந்தவர்களுக்கு நேர்ந்த கொடுமை
வேலூரில் பெட்ரோல் போட வந்தவர்கள் மீது, போதையில் இருந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே விருதம்பட்டு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் போட வந்த நபர்களை போதையில் இருந்த நான்கு இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் டி.கே.புரத்தைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவர் படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் விருதம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.