மீனவர் கண்ணில் மட்டுமே தென்பட்ட அம்மன் சிலை - `முத்தாக’ கிடைத்த 100 ஆண்டு பழைமை
தூத்துக்குடி அருகே கடலில் மூழ்கியிருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது.தருவைகுளம் மீனவ கிராமத்தில், ரூபன் என்பவரின் நாட்டுப்படகு பழுதடைந்த நிலையில், அதை சரி செய்யும் பணியின் போது, கடலில், சிலை தட்டுபட்டுள்ளது.
சிம்ம வாகனத்தில் அமர்ந்த நிலையில் அம்மன் உருவம் கொண்ட, கருங்கல் சிலை கண்டெடுக்கப்பட்டது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த சிலை குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.