திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் சாந்தனு சாமி தரிசனம் செய்தார். முதலில் மூலவரை வணங்கியபின், செல்வ விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் சன்னதிகளிலும் அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு மாலைகள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ரசிகர்கள் பலரும் அவரோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.