'அந்த மனசு தான் சார்..' மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஜூஸ் கடை வைத்து கொடுத்த நடிகர் பாலா
தனியார் தொலைக்காட்சி மூலம் பிரபலமான நடிகர் பாலா, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஜூஸ் கடை வைத்து கொடுத்துள்ளார். சமீப காலமாக இவர் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஜூஸ் கடை வைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில், நடிகர் பாலா, மாற்றுத்திறனாளியின் வீட்டிற்குச் சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசியதுடன், ஜூஸ் கடைக்கும் சென்றுள்ளார். இது தொடர்பான விடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.