ரூ.14 கோடி நிதி முறைகேடு - தஞ்சையை பரபரக்க வைத்த விஜிலென்ஸ் ரெய்டு
குப்பை தரம் பிரிப்பதில் 14 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து, தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக தற்போது தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக உள்ள சரவணகுமாரை தஞ்சாவூர் வரவழைத்து சுமார் 2 மணி நேரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தற்போது வேலூர் மாநகராட்சி ஆணையராக உள்ள ஜானகி ரவீந்திரனை வருகிற 26ஆம் தேதி ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக ஆய்வறிக்கை மூலம் 14 கோடி நிதி முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.