THAMIRABARANI || "மொத்தம் 72 இடம்" பாய்ந்தோடும் வெள்ளம் ரெடியான மீட்பு குழு
தாமிரபரணி ஆற்றில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, மழை அளவை பொறுத்து வெள்ள நீர் கால்வாயில் தண்ணீர் கொண்டுசெல்லப்படும் என்று கூறினார். இதையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியர், வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.