பாகிஸ்தானில் பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் சிந்த் மாநிலம், கராச்சி நகரம், எம் ஏ ஜின்னா பகுதியில் இயங்கும் பட்டாசு குடோன் திடீரென வெடித்து சிதறியது. இதில் அப்பகுதியில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.