காவலாளி மீது கல்லால் தாக்கிய பயங்கரம்.. ``அய்யோ.. அய்யோ..’’ அலறி துடித்த மனைவி
பூங்காவில் காவலாளி, மனைவி மீது தாக்குதல்- போலீஸ் விசாரணை
சென்னை அண்ணா நகர் சிந்தாமணியில் உள்ள பூங்காவில் காவலாளி மற்றும் அவரது மனைவியை ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். தனது தாயை காவலாளி தாக்கியதாக கூறி, ரமேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார். தடுக்க வந்த காவலாளியின் மனைவியையும் ரமேஷ் தாக்கியுள்ளார். பொதுமக்கள் தடுக்க முயன்றும், அவர் கல்லால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.