பள்ளிவாசலில் மோதிக்கொண்ட இரு தரப்பினர் | கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு
நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள அஞ்சுமனே இஸ்லாமியா ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில், பதவிக்காலம் முடிவடைய உள்ள நிர்வாக குழு மீண்டும் பதவி வகிக்க பொதுமக்களிடம் ஆதரவு கோரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.