Tenkasi | தன் ஊருக்கு டிக்கெட் கேட்ட 50 வயது பயணியை இரும்பு ராடால் தாக்கி நடத்துநர் வெறிச்செயல்

Update: 2025-11-22 09:38 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 50 வயது பயணியை அரசுப்பேருந்து நடத்துநர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசுப்பேருந்தில் சுப்பையா என்ற 50 வயது நபர் ஏறி, நயினாரகத்துக்கு டிக்கெட் கேட்டபோது, நடத்துனர் அங்கு பேருந்து நிற்காது என கூறியதாக தெரிகிறது. அப்போது, “எங்கள் ஊரில் அனைத்து பேருந்தும் நிற்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவே உள்ளது“ என சுப்பையா வாதாடினார்.இதனையடுத்து சுப்பையாவை, வலுக்கட்டாயமாக இறக்கிவிட்ட நடத்துநர், கீழே கிடந்த இரும்பு கம்பியை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த புகாரில், அரசுப்பேருந்து நடத்துநர் நாகேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்