அபராதம் வசூலித்த ஆசிரியர்கள் - கல்லூரி மாணவர்கள் சொன்ன அதிர்ச்சி காரணம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அரசு கலைக்கல்லூரியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றன. இந்த கல்லூரியில் பல்கலைக்கழக விதிமுறைப்படி வருகை பதிவேடு குறைவாக இருப்பதாக, மாணவ, மாணவிகளிடமிருந்து தலா ரூ.350 முதல் 600 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், போதிய அளவு வருகை பதிவு உள்ள மாணவர்களிடமும் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காததால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்துள்ளனர்.