ஆடிப் பாடி பாடம் நடத்தும் ஆசிரியை ரசினா - உற்சாகத்தில் அரசுப் பள்ளி மழலைகள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கல்லாங்குத்து அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு, கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆசிரியை ஆடிப்பாடி பாடம் கற்பித்து வருகிறார். மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும் இடையே நட்புறவை உருவாக்கவும், வகுப்பறையில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தவும் ஆசிரியை ரசினா, மாணவர்களை உற்சாகபடுத்துகிறார். அவரது இந்த முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.