"கட்சி துண்டு.. சர்ச்சை நடனம்" ஆசிரியர்களுக்கு ஆதரவாக தீடீர் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சோப்பனூர் அரசு பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் கட்சி துண்டை போட்டு நடனமாடிய விவகாரத்தில், இரு ஆசிரியர்கள் பணி இடம் மாறுதல் செய்யப்பட்டதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர்களை பணி மாறுதல் செய்யக்கூடாது எனக் கூறி 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.