- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில், கூகுள் பேயில் பணம் அனுப்பியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அரிவாளுடன் வந்தவரை வாழைக்காய் பஜ்ஜி போடும் கட்டையால் தாக்கிய டீக்கடை உரிமையாளர் மற்றும் டீ மாஸ்டரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அம்பாத்துறையைச் சேர்ந்த சின்னபாண்டி என்பவர், சிகரெட் வாங்கி கூகுள் பே-ல் பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது டீக்கடைக்காரருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சின்னபாண்டி, தனது காரில் இருந்த அரிவாளை எடுத்து வந்துள்ளார். பதிலுக்கு டீக்கடைக்காரரும் டீ மாஸ்டரும் பஜ்ஜி கட்டையை எடுத்து தாக்கியதில், சின்னபாண்டி தலையில் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.