தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலையே நிலவும் என்றும், ஒருசில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.