``பீகார்ல ஸ்கூலே பாக்கல; இங்க புக், சாப்பாடு, படிப்பு தராங்க..'' ஹிந்தி நாவில் ஒலிக்கும் தமிழ்
ஓசூர் அரசுப் பள்ளிகளில் வடமாநில மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
ஜீமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி... தமிழ்த்தாயை வாழ்த்தி பாடும் இந்த குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள்.
ஆம்... தொழில் நகரமான ஓசூரில் பிழைப்புக்காக வந்த வட மாநில தொழிலாளர்களின் பிள்ளைகள் அவர்கள்.
ஓசூர் ஓட்டல்கள்... தொழிற்சாலைகள்... கோழி பண்ணைகள், ரோஜா தோட்டங்கள், செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் அவர்கள், தங்கள் பிள்ளைகள் எப்படியாவது படிக்க வேண்டும் என்று அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.
ஜீமங்கலம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 180 மாணவர்களில், 90-க்கும் மேற்பட்டவர்கள் பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஜிமங்கலம் மட்டுமல்ல பேடரப்பள்ளி, உளிவீரனப்பள்ளி, பேலகொண்டபள்ளி, கொத்த கொண்டப்பள்ளி உள்பட பல அரசுப் பள்ளிகளிலும் வடமாநில மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எல்லைப் பகுதியில் இருக்கும் பள்ளிகளில் தமிழ், ஆங்கில மொழிகளோடு தெலுங்கு, கன்னட மொழிகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இந்தியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் முதலில் தடுமாறினாலும், இப்போது சரளமாக தமிழில் பேசுவதோடு மற்ற பாடங்களிலும் அசத்தி வருகிறார்கள்...
பீகாரில் எங்களுக்கு பள்ளிகளில் இந்த வசதியெல்லாம் கிடையாது; தமிழக அரசு எங்களுக்கு சீருடை தருகிறது; புத்தகம் தருகிறது; படிக்க எல்லாம் தருகிறது; எங்களுக்கு படிக்க ஆர்வமாக இருக்கிறது என நெகிழ்கிறார்கள் அந்த மாணவர்க