Tamilnadu Government | Former | விவசாயிகளுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்
வடகிழக்கு பருவமழையால் 33 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் டெல்டா மாவட்டங்களில் நான்காயிரத்து 437 ஹெக்டேர் நிலங்களிலும், மற்ற மாவட்டங்களில் 517 ஹெக்டேர் நிலங்களிலும் பயிர்களில் 33 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 33 சதவீதத்துக்கும் மேல் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி ஒரு வாரத்தில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது