தமிழ்நாடு முழுவதும் கேட்பாரற்று சுற்றி திரியும் நாட்டு இன மாடுகளை அரவணைத்து கோசாலையில் பராமரிக்கும் திட்டத்தை பிரபல வீட்டுமனை நிறுவனமான G SQUARE குழுமம் தொடங்கியுள்ளது. பராமரிப்பு இல்லாமலும், கேட்பாரற்று சாலையில் திரியும் மாடுகளை அரவணைக்கும் G SQUARE நிறுவனம், தங்களது மனைப்பிரிவு பகுதிகளில் கோசாலைகளை உருவாக்கி அங்கு மாடுகளுக்கு தேவையான உணவு மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கி வருகின்றனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை பராமரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள G SQUARE நிறுவனம், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.