Tamilnadu | America | தமிழர்களுக்காக அமெரிக்காவில் வரப்போகும் மிகப்பெரிய பிரம்மாண்டம்
அண்மையில், அமெரிக்காவில் 12-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிர்வாகிகள், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உலகளாவிய தமிழர்களுக்கு பயன்படும் வகையில், வாஷிங்டன் டி.சி. நகரில் 10 ஏக்கர் பரப்பளவில், தங்கும் விடுதியுடன் ஒரு பிரம்மாண்ட வர்த்தக மையத்தை அமைக்க இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு தமிழ்நாடு அரசு உதவியும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்று, அமெரிக்க முன்னாள் அமைச்சர் ராஜன் நடராஜன், உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் நிறுவனர் வி.ஆர்.எஸ்.சம்பத் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.