2ம் இடம் பிடித்த தமிழ்நாடு - அமைச்சர் தங்கம் தென்னரசு போட்ட ட்வீட்

Update: 2025-07-23 07:05 GMT

தமிழ்நாடு ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் மாநிலங்களுக்கிடையே இரண்டாவது இடத்தில் உள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த சாதனையானது, திமுக அரசின் தொலைநோக்கு திட்டங்கள், தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது "எல்லார்க்கும் எல்லாம்" என்ற உன்னத கொள்கையோடு செயல்பட்டு வரும் திமுக ஆட்சிக்கு கிடைத்த அடுத்த மணிமகுடம் எனவும் அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்