51 வகை மாத்திரைகள் தரமற்றவை.. மக்களே உஷார்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் 51 மருந்து மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளின் மாதிரிகளை, மத்திய மருந்துகள் ஆய்வகம் ஆய்வு செய்து வருகிறது. அவற்றின் தரம் தொடர்பான முடிவுகளையும் மாதாந்திர அடிப்படையில் மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதத்தை பொறுத்தவரை, 51 மருந்து மாதிரிகள் தரமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.