காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த நிலையில், உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கியதற்கு, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.