Dindugal | Kidnapping | இரண்டரை வயது குழந்தை கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் - இப்படி ஒரு காரணமா?

Update: 2025-11-20 05:14 GMT

திண்டுக்கல் அருகே, திருமணம் தாண்டிய உறவால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டன்சத்திரம், இடையகோட்டை புல்லாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி திவ்யாவுக்கு, விக்னேஷ் என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷின் வீட்டிற்குள் புகுந்த கலையரசன் தரப்பினர், விக்னேஷின் தங்கை மகளான இரண்டரை வயது குழந்தையை கடத்தி சென்றனர். இதனையடுத்து 5 பேரை கைது செய்த போலீசார், குழந்தையையும் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்