நீலகிரியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தரமற்ற சாலை பணியா? - கொதித்தெழுந்த மக்கள்
குன்னூர் Lams rock, Dolphin Nose ஆகிய சுற்றுலா தளங்களில் கான்கிரீட் ரோடு போடும் பணி காரணமாக, ஆகஸ்ட் 19ம் தேதி முதல் அந்த பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சாலை பணிகளால், இந்த பகுதிகளில் காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை அரசு பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸிற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில், தரமற்ற சாலை அமைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து மக்கள் கேள்வி எழுப்பியதற்கு, எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும் என அதிகாரிகள் அலட்சியமாக கூறியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.