ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய கோரி மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்

Update: 2025-07-16 12:47 GMT

சிவகங்கை அருகே அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் கணேசன் என்பவர் மாணவ மாணவிகளிடம் மிக கடுமையாகவும், ஒழுங்கீனமாகவும், சக ஆசிரியர்களிடம் மிரட்டும் தொனியிலும் நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் அவரை பணியிட மாற்றம் செய்ய கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற மாவட்ட கல்வி அலுவலர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.. 

Tags:    

மேலும் செய்திகள்