Students | Exam | பெற்றோர், மாணவர்கள் கவனத்திற்கு..! நாளை வெளியாகிறது பொது தேர்வு அட்டவணை

Update: 2025-11-03 09:00 GMT

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை சென்னையில் வெளியிடுகிறார். நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், நாளை காலை சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுத் தேர்வு அட்டவணை விவரங்களை வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர், அதன் பிறகு அட்டவணையை வெளியிடுகிறார். வழக்கம்போல் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி, ஏப்ரல் மத்தியில் தேர்வு முடியும் வகையில் அட்டவணை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால், அதற்கு முன்பாகவே தேர்வு பணி அனைத்தும் முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாக துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்