Madurai | Train | பால் பாக்கெட் வாங்க சென்ற மாணவி.. தூக்கி அடித்த ரயில்
மதுரை அருகே, தண்டவாளத்தை ஒட்டி நடந்து சென்ற கல்லூரி மாணவி மீது ரயில் மோதியதில், அவரது கை சேதமடைந்தது. போடி லைன் தண்டவாள பகுதியில், மாணவி சுகன்யா, பால் பாக்கெட் வாங்குவதற்காக நடந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி, ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.