Steel Bridge Chennai | ``இனி 5 நிமிடத்தில் சல்லுன்னு போலாம்''.. சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி
சென்னையின் முதல் இரும்பு பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்... தி.நகரில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 1.2 கிலோ மீட்டர் தொலைவில் 165 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் திறந்து வைத்தார்.இது 55 துாண்களுடன் 8 மீட்டர் அகலம் உடைய இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த மேம்பாலம் வழியாக 45 நிமிட பயணத்தை இனி வெறும் 5 நிமிடங்களில் மேற்கொள்ளலாம்...மறைந்த தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நினைவாக ஜெ.அன்பழகன் மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டு முதல்வர் திறந்து வைத்தார்